வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. க‌ல்‌வி
Written By
Last Updated : வெள்ளி, 1 டிசம்பர் 2017 (16:29 IST)

2017 ஆண்டுக்கான தமிழ்ப்பேராய விருதுகள் அறிவிப்பு

2017 ஆண்டு தமிழ்ப்பேராய விருதுகள் குறித்து அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, அறிவியல் தொழில்நுட்பக் கல்வியில் சிறந்து விளங்கும் SRM பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி, இலக்கியம், கலை, பண்பாட்டு வளர்ச்சி குறித்த விழிப்புணர்ச்சியை  உலகமுழுவதும் உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது தமிழ்ப்பேராயம்.
அதன் பணித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று தமிழ்ப்பேராய விருதுகள் திட்டம். ரூபாய் 22 இலட்சம் பெறுமானமுள்ள  பன்னிரண்டு விருதுகள் கொண்ட இத்திட்டத்தைக் சிறந்த தமிழ் நூல்கள், தமிழறிஞர்கள் மற்றும் சீரிய தமிழ்ப் பணியாற்றும்  தமிழ் இதழ்கள் மற்றும் தமிழ்ச் சங்கங்கள் பயன்பெறும் விதத்தில் விருதுகள் வழங்கப்படுகின்றன.
 
விருதுத்திட்டத்தின் தனிச் சிறப்புகள் என கூறப்படுவது, தமிழ்ப்பேராயம் கவிதைக்குத் தனியாகவும் சிறுகதை நாவலுக்குத்  தனியாகவும் இரண்டு விருதுகள் வழங்குகிறது. தமிழிசை, ஓவியம், சிற்பம் குறித்த திறனாய்வுகளுக்கும் விருது அளித்துத்  தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக்கு ஊக்கமளிக்கிறது தமிழ்ப்பேராயம். 2016 ஆம் ஆண்டு அயல்நாட்டுத் தமிழ்ச் சங்கப் பிரிவில்  கனடாத் தமிழ்க் கல்லூரிக்கு விருது வழங்கிப் பாராட்டப் பெற்றது.
தமிழ் அறிஞர் உலகம் நன்கறிந்த அறிஞர்கள் தமிழண்ணல், இளங்குமரனார், கோவை ஞானி முனைவர் சிலம்பொலி  செல்லப்பனார், கவிஞர் ஈரோடு தமிழன்பன் போன்ற அறிஞர்கள் தமிழ்ப்பேராய விருது பெற்றோரில் குறிப்பிடத்தக்கவர்கள்.
 
விருதுத் தேர்வு முறை விதிகளின்படி, படைப்பாளிகளும் தமிழறிஞர்களுமான ஆய்வுக்குழுவினர் அடிப்படைத் தெரிவில்  ஒவ்வொரு பிரிவிக்கும் சில நூல்களைத் தேர்ந்தெடுப்பர். அந்நூல்கள் அந்தந்தத் துறை வல்லுநர்களான 2 பேர் கொண்ட ஆய்வுக்  குழுவுக்கு அனுப்பப்பட்டு ஒவ்வொருவரிடமிருந்தும் இரண்டிரண்டு நூல்களின் தெரிவு பெறப்படும். ஆய்வர் குழுக்களின் நூல்  தெரிவுகள் ஐந்து பேர் கொண்ட நடுவர் குழுவின் பரிசீலனைக்கு வைக்கப்பட்டு இறுதிப் பரிந்துரைகள் பெறப்படும்.
 
2017 ஆம் ஆண்டு வரப்பெற்ற விருதுக்கான பரிந்துரைகள்:
 
1. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது - 33 நூல்கள்
2. பாரதியார் கவிதை விருது - 59 நூல்கள்
3. அழ, வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - 43 நூல்கள்
4. ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருது - 20நூல்கள்
5. பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது - 19 நூல்கள்
6. ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது & முத்துத்தாண்டவர் தமிழிசை விருது - 08 நூல்கள்
7. விபுலானந்தர் படைப்பிலக்கிய இளம் தமிழ் ஆய்வறிஞர் விருது - 52 நூல்கள்
8. ஆ.பெ.ஜெ. அப்துல்கலாம் இளம் தமிழ் ஆய்வறிஞர் விருது - 08 நூல்கள்
9. சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது - 14 நூல்கள்
10. தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருது - தமிழகம் 9 சங்கங்கள், அயல் மாநிலம் 4 சங்கங்கள், அயல்நாடு 3 சங்கங்கள்
11. பரிதிமாற் கலைஞர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அறிஞர்கள் - 34 பேர்
12. பாரிவேந்தர் பைந்தமிழ் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அறிஞர்கள் - 33 பேர்
13. பிற 45
 
என ஆக மொத்தம் 384 ஆகும். 2016 ஆம் ஆண்டு போட்டிக்கு வரப்பெற்றவை 295 ஆகும்.
 
தமிழ்ப்பேராய விருதுகள் - 2017
 
2017 ஆம் ஆண்டு விருது பெறும் நூல்கள், படைப்பாளர்கள், இதழ்கள் தமிழ்ச்சங்கங்கள் மற்றும் தமிழறிஞர்கள் விவரம்:-
 
1. நூல்: புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது - ஆசிரியர்: ரூ, 1,50,000.
 
2. நூல்: பாரதியார் கவிதை விருது - ஆசிரியர்: ரூ, 1,50,000.
 
3. நூல்: அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - ஆசிரியர்: ரூ, 1,50,000.
 
4. நூல்: ஜி,யூ. போப் மொழிபெயர்ப்பு விருது - ஆசிரியர்: ரூ, 1,50,000.
 
5. நூல்: பெ.நா. அப்புசாமி அறிவியல் தமிழ் விருது - ஆசிரியர்: ரூ, 1,50,000.
 
6. நூல்: ஆனந்தகுமாரசாமி கவின்கலை விருது & முத்துத்தாண்டவர் தமிழிசை விருது - ஆசிரியர்: ரூ, 1,50,000.
 
7. நூல்: விபுலானந்தர் படைபிலக்கிய விருது - ஆசிரியர்: ரூ, 1,50,000.
 
8. நூல்: ஆ.பெ..ஜெ அப்துல் கலாம் இளம் தமிழ் ஆய்வறிஞர் விருது - ஆசிரியர்: ரூ, 1,50,000.
 
(வரிசை எண் 1 முதல் 8 வரை விருதுத்தொகை ரூ.1,50,000 படைப்பாளருக்கு ரூ. 1,25,000 பதிப்பகத்தாருக்கு ரூ.25,000 எனப்  பகிர்ந்தளிக்கப்படும்.)
 
9. சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது - ஆசிரியர்: ரூ, 1,00,000.
 
10. தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது - ரூ. 2,00,000.
 
(தமிழ்நாடு - ரூ. 50,000, அயல் மாநிலம் - ரூ. 50,000, அயல் நாடு - ரூ. 1,00,000.)
 
11. தமிழறிஞர்: பரிதிமாற்கலைஞர் விருது (சிறந்த தமிழறிஞர், மதிப்புறு தகைஞர்) -  ரூ. 2,00,000.
 
12. தமிழ்ப்பேரறிஞர்: பாரிவேந்தர் பைந்தமிழ் விருது (தமிழ்ப்பேரறிஞர், வாழ்நாள் சாதனையாளர்) - ரூ. 5,00,000.