1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : ஞாயிறு, 10 மார்ச் 2024 (17:02 IST)

அனைவரும் பைத்தியமாகி விட்டனர்: ‛எக்ஸ்’ பக்கத்தில் கிருத்திகா உதயநிதி பதிவு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி தனது சமூக வலைதளத்தில் அனைவரும் கொஞ்சம் பைத்தியமாகிவிட்டனர் என்று பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருமகள் உதயநிதி ஸ்டாலின் 'வணக்கம் சென்னை' என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகி அதன் பின்னர் காளி உள்பட ஒரு சில படங்களை இயக்கியுள்ளார்.
 
இந்த நிலையில் அவர் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: சமூக வலைதளங்களில் மனிதர்களின் நடத்தையால் நான் கவர்ந்திழுக்கப்பட்டேன். ஏனென்றால் அனைவரும் கொஞ்சம் பைத்தியமாகிவிட்டனர்'' என்று பதிவு செய்துள்ளார்.
 
சமீபத்தில் போதை பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் தயாரித்த மங்கை என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கிருத்திகா உதயநிதி தான் வெளியிட்டு இருந்தார். இதனை வைத்து சில சர்ச்சைக்குரிய பதிவுகள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை  அடுத்து தான் கிருத்திகா உதயநிதி இவ்வாறு பதிவு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது
 
Edited by Siva