திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 9 மார்ச் 2024 (15:51 IST)

ஜாபர் சாதிக்கின் தமிழ் சினிமா நெட்வொர்க் குறித்து விசாரணை! யார் யார் சிக்குவார்கள்?

ரூ.2000 கோடிக்கு போதைப்பொருள் வெளிநாட்டுக்கு கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பெரும் அளவு பணத்தை தமிழ் சினிமாவில் ஜாபர் சாதிக் முதலீடு செய்திருக்கிறார் என்றும் மங்கை என்ற படம் போதைப் பொருள் கடத்தியதன் மூலம் கிடைத்த பணத்தில் தான் தயாரித்ததாக அவர் கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

மேலும் தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலர் ஜாபர் சாதிக் உடன் இணைந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாகவும் தமிழகத்தில் மட்டுமின்றி மும்பையிலும் அவருக்கு சினிமா நெட்வொர்க் இருப்பதாகவும் இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றும் மத்திய போதைப்பொருள் தடுப்பு துறை தெரிவித்துள்ளது

இதுவரை 3500 கிலோ போதை பொருள் ஜாபர் சாதிக் கடத்தி இருப்பதாகவும்  இந்தியாவிலிருந்து மலேசியா ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு கடத்தி இருப்பதாகவும் போதைப்பொருள் தடுப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran