ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வெள்ளி, 7 ஜூலை 2023 (15:13 IST)

லவ் டார்ச்சர் கொடுக்கும் முன்னணி ஹீரோவின் மகன்? மனம் திறந்த கீர்த்தி ஷெட்டி!

தென்னிந்திய சினிமாவின் அழகிய இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி தெலுங்கில்  உப்பெண்ணா திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆனார். வில்லன் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த அந்த ஒரு படத்திலேயே தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
 
இதையடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சூர்யாவின் வணங்கான் படத்திலும் அவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் படத்தில் இருந்து சூர்யா வெளியேறிவிட்ட நிலையில் இப்போது இவரும் வெளியேறியுள்ளார். அதனால் தமிழில் நல்ல அறிமுகத்துக்காக காத்திருக்கிறார்.
 
இதனிடையே நடிகை ஒரு நட்சத்திர ஹீரோவின் மகன் கீர்த்தி ஷெட்டிக்கு டார்ச்சர் கொடுப்பதாக தகவல் வெளியாகியது. எப்படியும் கிருத்தி ஷெட்டியுடன் நட்பாக இருக்குமாறு அவரை துன்புறுத்தி வருகிறாராம். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவருடன் சுற்றித் திரிந்து பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. சமீபத்தில், கிருத்தி ஷெட்டி ஒரு தமிழ் நேர்காணலில், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தனது பிறந்தநாள் விழாவிற்கு வருமாறு தொலைபேசியில் அழைப்பு விடுத்து சித்திரவதை செய்வதாக தெரிவித்தார்.
 
யார் அந்த ஹீரோ?: ஆனால் அந்த பார்ட்டிக்கு செல்ல விரும்பாத கீர்த்தி ஷெட்டி, எந்த பார்ட்டிகளுக்கும் ராணாவின் அழைப்புகளை கட் செய்ததாக கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஆனால், அந்த நட்சத்திர ஹீரோவின் மகன் யார்.. ஏன் கிருத்தியை பின் தொடர்கிறார்.. தமிழ் ஹீரோ மகனா ... அல்லது தெலுங்கு ஹீரோ மகனா என்று நெட்டிசன்கள் விவாதித்து வந்தனர். 
 
இந்நிலையில் தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ள கீர்த்தி ஷெட்டி  "இது முற்றிலும் பொய்யான தகவல். இப்படி ஒரு செய்தியை முதலில் கண்டுகொள்ளாமல் தான் விட்டுவிட்டேன், ஆனால் இது எல்லைமீறி செல்கிறது" என கீர்த்தி ஷெட்டி தெரிவித்து இருக்கிறார்.