வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 6 ஜூலை 2023 (21:21 IST)

பால்கனியில் பளீச்சுனு டால் அடிக்கும் ஹன்சிகா... இளசுகளை இழுக்கும் ஸ்டில்!

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து தனது நடிப்பை துவங்கிய ஹன்சிகா  தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். 
 
அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார். பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து சினிமாவுக்கு சில நாட்கள் பிரேக் விட்ட ஹன்சிகா மீண்டும் தனது இன்னிங்ஸை துவங்கி ஹிட் படங்களை கொடுத்தார். 
 
ஜெயம் ரவியுடன் அவர் நடித்த ரோமியோ ஜூலியடீ படம் சூப்பர் ஹிட் அடித்த பட வாய்ப்புகள் அடுத்தது குவிய துவங்கியது. பப்ளி லுக்கில் கொழு கொழுன்னு இருந்த தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி ஹாட் போடோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அதையடுத்து தனது நண்பரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். 
 
திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக பார்ட்னர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் அழகான லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.