வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 16 ஜூன் 2024 (07:00 IST)

விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு வரமாட்டேன்… KPY பாலா பதில்!

விஜய் டிவில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமானவர் பாலா. தற்போது திரைப்படங்களிலும் நடித்து வரும் பாலா, ஏழை எளிய மக்களுக்காக பல உதவிகளையும் செய்து வருகிறார்.குக்கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை, பெட்ரோல் பங்க் ஊழியருக்கு பைக் என பாலா செய்து வரும் உதவிகள் தினம் தோறும் ட்ரெண்டாகி வருகின்றன.

அதே சமயத்தில் பாலா சினிமாவில் ஹீரோவாக ஆகவேண்டும் என்பதற்காகதான் இப்படி செய்யும் உதவிகளை பப்ளிசிட்டி பண்ணிக் கொள்கிறார் என்று அவர் மேல் விமர்சனங்களும் எழாமல் இல்லை. அதற்கேற்றார் போல நடிகர் ராகவா லாரன்ஸ் பாலாவை தான் ஹீரோவாக்க உள்ளதாகவும், அதற்காக யாராவது நல்ல கதை வைத்திருந்தால் என்னை அணுகவும் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் விஜய் அரசியலுக்கு அழைத்தால் வருவீர்களா என்ற கேள்விக்கு மாட்டேன் என பதிலளித்துள்ளார் பாலா. அதில் “எனக்கு அரசியலைப் பற்றி எதுவும் தெரியாது. அதனால் விஜய் அழைத்தாலும் நான் அரசியலுக்கு வரமாட்டேன்” எனக் கூறியுள்ளார்.