மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்? – முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
மற்ற மாநிலங்களிலும் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணிவதை அவசியம் ஆக்கும்படி மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின் மேலும் சில முக்கிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.