வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 27 ஏப்ரல் 2019 (10:19 IST)

யோகி பாபுவின் அம்மா இந்த பிரபல நடிகையா! அட என்னப்பா சொல்லுறீங்க!

தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.


 
கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த காமெடி பிரபலங்களான சந்தானம், சூரி போன்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்த்திழுத்தவர் நடிகர் யோகி பாபு. 
 
சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும்,  உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது.  தற்போது விஜய்யின்  தளபதி 63 மற்றும் ரஜினியின் தர்பார் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படத்திலும் நடித்து வருகிறார்.


 
இப்படி தொடர்ந்து பல முன்னணி நடிகர், நடிகைகளின் படங்களில் நடித்து வந்த யோகிபாபு தற்போது தர்மபிரபு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.  இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும்  வரவேற்பைப் பெற்றது. 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலென்னவென்றால், தர்மபிரபு படத்தில் யோகி பாபுவின் அம்மாவாக 1990-க்களில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்த பிரபல நடிகை ரேகா நடித்துள்ளாராம். இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.