1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 10 மே 2019 (12:45 IST)

சம்பவம் இருக்கு! இவங்கயெல்லாம் தான் பிக்பாஸ் 3 போட்டியாளர்கள்! லிஸ்ட் இதோ!

கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் 3 சீசனுக்கான பணிகள் துவங்கியது. கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. 


 
ரசிகர்களின் ஏகோபித்த வரவவேற்பை பெற்ற பிக் பாஸ் 3 சீசனும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. நேற்று இதற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கிய நிலையில் வருகிற ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் 3-வது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்  போட்டியாளர்கள் பற்றிய செய்திகளும் வந்த வண்ணம் இருக்கிறது. 
 
அந்த வகையில் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பங்குபெற அதிக வாய்ப்புள்ள போட்டியாளர்களின் விவரம் தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டுவருகிறது அதில், 
 
 1 )  டப்ஸ்மாஷ் புகழ் மிருணாளினி
 2 )  நடிகை சாந்தினி
 3)   நடிகை கஸ்தூரி
 4)   நடிகை விசித்ரா
 5)   நடிகர் ராதாரவி
 6)   வி ஜே ரம்யா
 7)   நடிகை பூனம் பஜ்வா
 8)   நடிகர் ரமேஷ் திலக்
 9)  நடிகர் ரமேஷ் திலக்
10) மாடல் பாலாஜி
11)  நடிகர் பிரேம்ஜி
12)  நடிகை மதுமிதா
13)  நடிகர் ஸ்ரீமந்த்
14)  நடிகர் சந்தானபாரதி
15)  பாடகர் கிருஷ்


 
இந்த லிஸ்டை பார்த்தால் கடந்த 2 சீசனை விட இது மிகவும் சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும் போல் தெரிகிறது ஏனென்றால் சர்ச்சைக்கு பஞ்சமில்லாதவகையில் கஸ்தூரி,  ராதாரவி என்று சர்ச்சையான நடிகர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த லிஸ்டை கண்ட நெட்டிசன்கள் கமலுக்கு பஞ்சாயத்து தீர்த்து வைக்கவே நேரம் பத்தாது போலயே என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.