திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 மே 2022 (09:15 IST)

வசந்தகாலத்துக்கு செல்வோமா?.... கோலங்கள் ரிட்டர்ன்ஸ்… வெளியான அறிவிப்பு!

தேவயானி நடிப்பில் திருச்செல்வம் இயக்கத்தில் வெளியாகி மெஹா ஹிட் ஆன சீரியல் கோலங்கள்.

சன் தொலைக்காட்சியில் 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தேவயானி நடிப்பில் உருவான மெகா தொடர் கோலங்கள். இதை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி இருந்தார். சன் தொலைக்காட்சியின் வரலாற்றில் ஆல்டைம் ஹிட்டாக அமைந்த சீரியல் இது. இதன் இரண்டாம் பாகம் கூட உருவாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் அது அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை.

இந்நிலையில் இந்த ஹிட் சீரியலை இப்போது கலர்ஸ் தமிழ் சேனல் மறு ஒளிபரப்பு செய்ய உள்ளது. இந்த சீரியல் இன்று முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும் மற்றொரு ஹிட் சீரியலான தென்றல் தொடரும் கலர்ஸ் தமிழில் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.