திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (09:18 IST)

22 years of நீ வருவாய் என... மீண்டும் ட்ரெண்டாகும் தேவயானி!

நடிகை தேவயானி , பார்த்திபன் நடித்து 1999ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் நீ வருவாய் என. இதில் முக்கிய காமெடி நடிகராக ரமேஷ் கண்ணா நடிக்க சிறப்பு தோற்றத்தில் நடிகர் அஜித் நடித்திருந்தார். இந்த படம் வெளியான புதிதில் மட்டுமல்லாது இன்றளவும் விரும்பி பார்க்கும் திரை ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
 
தமிழியில் மெகா ஹிட் அடித்த இத்திரைப்படம் தெலுங்கில் ரிமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா, ஒரு தேவதை வந்துவிட்டால் உள்ளிட்ட பாடல்கள் எவர்க்ரீன் ஹிட் அடித்தது. இந்நிலையில் இத்திரைபடம்வெளியாகி இன்றோடு 22 ஆண்டுகள் ஆவதை "22 years of நீ வருவாய் என" இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இதேபோல் தேவயானி அஜித் நடித்த காதல் கோட்டை படம் அண்மையில் 25வது ஆண்டை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.