1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2022 (09:39 IST)

தேவயானியின் எவர்கிரீன் ‘கோலங்கள்’ சீரியல் ரிட்டர்ன்ஸ்…? எந்த தொலைக்காட்சியில்?… முழு விவரம்

தேவயானி நடிப்பில் திருச்செல்வம் இயக்கத்தில் வெளியாகி மெஹா ஹிட் ஆன சீரியல் கோலங்கள்.

சன் தொலைக்காட்சியில் 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தேவயானி நடிப்பில் உருவான மெகா தொடர் கோலங்கள். இதை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி இருந்தார். சன் தொலைக்காட்சியின் வரலாற்றில் ஆல்டைம் ஹிட்டாக அமைந்த சீரியல் இது. இதன் இரண்டாம் பாகம் கூட உருவாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் அது அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை.

இந்நிலையில் இந்த ஹிட் சீரியலை இப்போது கலர்ஸ் தமிழ் சேனல் மறு ஒளிபரப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் சமூகவலைதளங்களில் இந்த தகவல் இப்போது வேகமாக பரவி வருகிறது.