வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 மார்ச் 2019 (08:36 IST)

கிஸ் அடிச்சா என்ன தப்பு? எகிறும் பிரபல நடிகர்

படத்தில் முத்தம் கொடுக்கும் காட்சிகளை வைத்தால் என்ன தப்பு இருக்கிறது எனவும், என் படத்தை மட்டும் ஏன் குறை கூறுகிறீர்கள் எனவும் நடிகர் ஹரிஷ் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்த ஹரிஷ் கல்யாணும், பிக்பாஸ் ரைசாவும் நடித்த 'பியார் பிரேமா காதல்' நல்ல வெற்றியை பெற்றது.
 
இந்த வெற்றியைத் தொடர்ந்து ஹரிஷுக்கு 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற பட வாய்ப்பு கிடைத்து அதில் நடித்தும் முடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகிய நிலையில் அதில் நிறைய முத்தக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு பல விமர்சனங்கள் எழுந்தது.
இதனால் கடுப்பான ஹரிஷ், எல்லோரும் செய்வதை தான் படத்தில் காட்சியாக வைத்துள்ளோம். இதில் என்ன தவறு உள்ளது. ஏன் விமர்சனம் செய்கிறீர்கள் என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.