செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 28 மார்ச் 2020 (16:55 IST)

5 நிமிடம் வெளியே சென்றதால் நடிகை கிரண் ரதோட்டிற்கு ஏற்பட்ட சோகம் - வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

விக்ரமுருடன் ஜெமினி,  கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கிரண் ரதோட்,  "நண்பர்களே நான் வெறும் 5 நிமிடங்கள் வெளியே சென்றதால் இந்த அளவிற்கு நோய் வாய்ப்பட்டேன்... விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன் .. எனவே, நீங்கள் என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் யாரும் வெளியேற வேண்டாம் என கூறியுள்ளார்.