புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2019 (15:46 IST)

"விஜய்க்கு ஜோடியாகும் பாலிவுட் சர்ச்சை நடிகை" தளபதி 64 லேட்டஸ்ட் அப்டேட்ஸ்!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுள் ஒருவரான நடிகர் விஜய் தற்போது அட்லீ கூட்டணியில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் வருகிற தீபாவளி தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது. 


 
பிகில் படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64-வது படத்தில் நடிக்கிறார். பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்திலிருந்து துவங்கும் என்றும் நடிகர் விஜய் இந்தப் படத்துக்காக 120 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக  மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சற்று முன் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகையான கியாரா அத்வானியிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.


 
தோனி படத்தின் மூலம் புகழ்பெற்ற கியார அத்வானி நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சி ஒன்றில் நடித்து பெரும் சர்ச்சைக்குள்ளானார். மேலும் சமீபத்தில் வெளியான அர்ஜுன் ரெட்டி இந்தி ரிமேக் கபீர் சிங் படத்தில் சயீத் கபூருக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.