ஆரம்பமானது கே.ஜி.எஃப் அத்தியாயம் 2 – உலகளவில் ட்ரெண்டிங்!
கடந்த வருடம் வெளியாகி இந்தியா முழுவதும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்த கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து வெளியான படம் கே.ஜி.எஃப். கன்னடத்தில் உருவான இந்த படம் ஒரே சமயத்தில் இந்தி, தெலுங்கு, தமிழ் உள்பட நான்கு மொழிகளில் வெளியானது. ஆரம்பத்தில் மற்ற மொழி ரசிகர்கள் யாரும் ஆர்வம் காட்டாத நிலையில் திடீரென கே.ஜி.எஃப் படத்திற்கு மக்கள் கூட்டம் அலை மோத தொடங்கியது.
கர்நாடகத்தில் உள்ள கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவான இந்த படமும், அதன் பாடல்களும் அனைத்து மொழியினராலும் ரசிக்கப்பட்டது. கிட்டத்தட்ட தமிழகத்தில் மட்டுமே ஒரு மாதத்திற்கும் மேலாக ஓடிய கே.ஜி.எஃப் வசூலில் பெரும் சாதனையை படைத்தது.
இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் 2020ல் வெளியாகவுள்ளது. முதல் படத்தில் பல ட்விஸ்டுகள் வைத்து முடித்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்புகளுக்காக பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது இரண்டாம் அத்தியாயத்தின் ஃபர்ஸ்ட் லுக் டிசம்பர் 21 அன்று வெளியாவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
அதை தொடர்ந்து ரசிகர்கள் #KGFChapter2 என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ட்விட்டரில் இந்த ஹேஷ்டேக் உலக அளவில் மூன்றாவது இடத்திலும், இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.