1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 14 மே 2022 (15:48 IST)

கே ஜி எஃப் 3 எப்போது தொடங்கும்? ரிலீஸ் பிளான் என்ன? வெளியான தகவல்!

கன்னடத்தில் எடுக்கப்பட்ட கே ஜி எஃப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான கே ஜி எஃப் 1 படம் இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸானது.

இந்த படம் 10000 திரைகளில் உலகம் முழுவதும் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது வரை 1000 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. படத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்துக்கான ஒரு சிறு முன்னோட்டம் கொடுக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து மூன்றாம் பாகம் பற்றி பேசியுள்ள கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் “கேஜிஎஃப் 3 படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி 2024 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன” எனக் கூறியுள்ளார்.