வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (11:45 IST)

யாஷ் பிறந்தநாளில் கேஜிஎப் 2 டிரைலர் ரிலிஸ் – வெளியான அறிவிப்பு!

கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். 

இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2  தற்போது உருவாகி வருகிறது. எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக இந்த படத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளைப் படக்குழு படமாக்கியது.

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகன் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 8 ஆம் தேதி டீசரை ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.