1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 ஜூலை 2021 (10:40 IST)

உலக சாதனைப் படைத்த கேஜிஎப் 2 டீசர்!

கேஜி எப் 2 படத்தின் டீசர் 20 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது சினிமா ரசிகர்கள் இடையே அந்த படத்துக்கு இருக்கும் வரவேற்பைக் காட்டுகிறது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2  தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் நேற்று இரவு இணையத்தில் வெளியானது.

இந்த டீசர் உலக சாதனைப் படைக்கும் விதமாக இப்போது 200 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் 8 மில்லியன் லைக்ஸ்களை பெற்றுள்ளது. உலகத்தில் எந்த டீசரும் இந்த எண்ணிக்கையில் லைக்ஸ் பெற்றதில்லை என்ற சாதனையைப் பெற்றதில்லை.