வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 ஜூலை 2021 (16:45 IST)

ஐதராபாத்தில் தொடங்கியது மோகன்லால் பட ஷூட்டிங்!

பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இந்நிலையில் இப்போது லாக்டவுன் சமயத்தில் மோகன்லாலை வைத்து ஒரு நகைச்சுவைக் கதையை இயக்க உள்ளார். இந்த படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மோகன்லாலுடன் பிருத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா மற்றும் கனிகா உள்ளிட்ட  பலரும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்த படத்துக்கு ப்ரோ டாடி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு இன்னும் கேரளாவில் குறையாத நிலையில் அங்கு படப்பிடிப்புக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை என்பதால் ஐதராபாத்துக்கு படக்குழு சென்றுள்ளது.