1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2024 (07:53 IST)

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண தேதி.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்த மாதம் திருமணம் செய்யப் போவதாகவும் 15 வருடங்களாக காதலித்த நபரை கைப்பிடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும், 'நடிகையர் திலகம்' என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு சில நடிகர்களுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது தனது 15 ஆண்டுகால நண்பரான அந்தோணி என்பவரை டிசம்பர் 15ஆம் தேதி திருமணம் செய்ய இருப்பதாகவும், இந்த திருமணம் கோவாவில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று சொல்லப்படும் நிலையில், ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ’ரிவால்வர் ரீட்டா கன்னிவெடி', மற்றும் 'பேபி ஜான்' ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும், இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Edited by Siva