வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2024 (12:10 IST)

ஏன் உளுந்தூர் பேட்டையில் உள்ள நாய்க்கு பிரியாணி கிடைக்கக் கூடாதா?... காதல் குறித்த மீமுக்கு விக்னேஷ் சிவன் பதில்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாகி இன்று பல சர்ச்சைகளுக்குப் பிறகு நெட்பிளிக்ஸில் ரிலீஸாகியுள்ளது.

இந்த ஆவணப்படத்தில் தங்கள் மேல் சிம்ப்பதி உருவாகும் விதமாகவே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் பேசியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த ஆவணப்படத்தில் ஒரு இடத்தில் விக்னேஷ் பேசும்போது “நாங்கள் காதலிப்பது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியான போது ‘‘நாகூர் பிரியாணி உளூந்தூர்பேட்டைல இருக்குற நாய்க்குக் கிடைக்கணும்னு இருந்தா அத யாராலயும் மாத்த முடியாதுனு’ மீம் ஒன்னு உருவாகி பரவுச்சு. ஏன் உளுந்தூர் பேட்டைல இருக்க நாய்க்கு எல்லாம் பிரியாணிக் கிடைக்கக் கூடாதா? ஒரு சாதாரண பஸ் கண்டக்டர் இன்னைக்கு சூப்பர் ஸ்டார் ஆகலயா?” எனப் பதிலளித்துள்ளார்.

நானும் ரௌடிதான் பட ஷூட்டிங்கின் போதுதான் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதற்கு முன்னர் நயன்தாரா இரண்டு காதல் உறவுகளில் இருந்து பின்னர் பிரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.