ராம் சரண் உடன் நாட்டு கூத்து பாடலுக்கு நடனமாடிய கீர்த்தி சுரேஷ் - வீடியோ!
பாலிவுட் என்றால் இந்திய சினிமா என்ற அயல் நாட்டினர் மத்தியில் இருந்து எண்ணத்தை அழித்து இந்திய சினிமாவில் தெலுங்கு, தமிழ் என பல மொழிகளின் தொகுப்பே இந்திய சினிமா என்பதை அகில உலக அரங்கில் பறைசாற்றி உள்ளது RRR திரைப்படம்.
பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ராம் சரண் , ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் இடம் பெற்ற நாட்டு கூத்து பாடலுக்கு ஆஸ்கார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இப்பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் ராம் சரணுடன் மேடையில் நடனமாடியுள்ளனர். இந்த பழைய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ: