1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (09:57 IST)

யுவன் பிறந்தநாளில் ஒன்றாக தெருக்குரல் அறிவு மற்றும் தீ!

எஞ்சாயி எஞ்சாமி பாடல் விவகாரத்தில் தெருக்குரல் அறிவு புறக்கணிக்கப்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் சர்ச்சை தொடங்கியது.

பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் இரு வாரங்களுக்கு  எஞ்சாய் எஞ்சாமி பாடல் யு டியூபில் வெளியானது.  இந்த பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுத தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து பாடி இருந்தனர். குரலில்  ஏ ஆர் ரஹ்மானின் மாஜா ஸ்டுடியோவின் இணையப்பக்கத்தில் இந்த பாடல் வெளியானது. வெளியானதில் இருந்தே மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த பாடல் திரையுலகினர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது.

இந்நிலையில் இப்போது இந்த பாடல் யுடியுபில் 30 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது. தமிழில் பெரிய நடிகர்களின் சினிமாப் பாடல்களுக்குக் கூட கிடைக்காத வரவேற்பு இந்த தனியிசைப் பாடலுக்குக் கிடைத்துள்ளது. இந்நிலையில் ரோலிங் ஸ்டோன் என்ற பத்திரிக்கை மிகவும் பிரபலமான பாடல்களை பாடியவர்களை அங்கிகரிக்கும் பொருட்டு அவர்களின் நேர்காணலையும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டது. ஆனால் அதன் அட்டை படத்தில் தீ படம் மட்டுமே இடம்பெற்றது. அறிவு புறக்கணிக்கப்பட்டதாக இப்போது சமூகவலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்டவர்கள் அறிவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.

இதனால் அறிவுக்கும் தீக்கும் இடையில் பிரச்சனை எழுந்த்தாகப் பேசப்பட்டது. இந்நிலையில் நேற்று நடந்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள் விழாவில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர். நடிகர் தனுஷோடு அவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.