1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 27 மே 2023 (12:38 IST)

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா பட ஷூட்டிங் நிறைவு… படக்குழு வெளியிட்ட புகைப்படம்!

கேஜிஎப், காந்தாரா உள்பட சூப்பர் ஹிட் படங்களை எடுத்த ஹோம்பாலே பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்திற்கு ’ரகு தாத்தா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தனர். இதுகுறித்த போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டு இருந்த நிலையில் இப்போது மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.