1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified வியாழன், 25 மே 2023 (16:56 IST)

சினிமாவில் அறிமுகமாகும் அக்காவுக்கு வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ். குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள்.
Keerthi Suresh sister becomes director and first look poster released –  Tamil News
 
தொடர்ந்து இந்தி, தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் அக்கா ரேவதி சுரேஷ் இயக்குனர் ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அவர் தற்போது தேங்க் யூ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். அதன் போஸ்டரை வெளியிட்டுள்ள கீர்த்தி சுரேஷ் அக்காவுக்கு வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.