1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 2 ஜூலை 2018 (21:34 IST)

ஆங்கில இதழ் அட்டைப்படத்திற்கு போஸ்; அசத்தும் கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், ஆங்கில இதழின் அட்டைப்படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

 
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் ரஜினி முருகன் திரைப்படம் மூலம் பிரபலமானார். அதைத்தொடர்ந்து அவருக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தது. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
 
அதில் அவரது நடிப்பை பலரும் பாராட்டினர். அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதன்மூலம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் அவருக்கான பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
 
இந்நிலையில் இவர் ஆங்கில இதழ் ஒன்றின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்கில் வைரலாக பரவி வருகிறது.