1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 11 ஜூன் 2018 (19:21 IST)

எங்க தளபதி காலு மேல் உன் காலா? - கீர்த்தி சுரேஷை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது.

 
நடிகர் விஜயை வைத்து துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் முருகதாஸ் தற்போது மீண்டும் விஜயை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. 


 
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில், தரையில் அமர்ந்திருக்கும் விஜயின் காலை, ஷோபாவில் அமர்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷ் மிதித்த படி அமர்ந்துள்ளார். இதைக்கண்ட விஜய் ரசிகர்கள், எங்கள் தளபதி காலை மிதிக்கும் படி நீ எப்படி உட்கார்ந்திருக்கலாம் எனக்கூறி ஏகப்பட்ட மீம்ஸ்களை உருவாக்கி சமூக வளைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.