1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2024 (14:26 IST)

இந்தி தெரியாது போய்யா.. கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ டீசர் ரிலீஸ்

நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்த ரகு தாத்தா என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  
 
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ரகு தாத்தா திரைப்படத்தின் டீசரில் அவர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்வது போன்ற காட்சிகள் உள்ளன.  ஹிந்தி தெரிந்தால்தான் புரமோஷன் கிடைக்கும் என்றால் அந்த புரமோஷன் வேண்டாம் என்ற வசனமும் கரும்பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துக்களை அழிப்பதுமான காட்சிகள் இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது.
 
மேலும்  என்னுடைய கருத்து வெகுஜனங்களுக்கு போய் சேர வேண்டும் என்றால் மெட்ராஸ் போக வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் சொல்லும் வசனமும்  இதை எல்லாம் மீறி ஹிந்தியை திணித்தே தீருவோம் என்றால் ஹிந்தி தெரியாது போயா என்று சொல்வோம் என கீர்த்தி சுரேஷ் பேசும் வசனமும் மாஸாக உள்ளது.
 
கீர்த்தி சுரேஷ், எம்எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய்,  உள்பட பலர்  ரகுதாத்தா படத்தில் நடித்துள்ளனர். சுமன் குமார் இயக்கத்தில்  சீன் ரோல்டான் இசையில் உருவாகிய இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.
 
Edited by Mahendran