வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 16 மார்ச் 2018 (21:28 IST)

கீர்த்தி சுரேஷா இது... வைரலாகும் புகைப்படம்

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாரு தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். 
 
தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் தயாராகி வரும் இப்படத்தில், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மானும், சமந்தா பத்திரிகை நிருபராகவும், அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாகசைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர். 
 
இந்நிலையில், சாவித்திரியாக யாராலும் நடிக்க முடியாது என்றும், அவரது வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவர் இல்லை என்றும் விமர்சம் வந்தது. ஆனால், இதனை கீர்த்தி மறுத்தார். தற்போது, சாவித்திரியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷின் தோற்றம் வெளியாகியுள்ளது. அவரோடு சேர்த்து துல்கர்சல்மான் தோற்றமும் வெளியாகி உள்ளது.