வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (15:52 IST)

கீர்த்தி சுரேஷின் ‘சாணிக்காகிதம்’ ரிலீஸ் அறிவிப்பு!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ் என்பது தெரிந்ததே. இவர் தமிழில் பிரபல இயக்குனர் செல்வராகவன் உடன் நடித்து வந்த திரைப்படமான ‘சாணிக்காகிதம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது
 
இதனை அடுத்து படக்குழுவினர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தற்போது விறுவிறுப்பாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘சாணிக்காகிதம்’ படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் ‘சாணிக்காகிதம்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
வரும் நவம்பர் மாதம் அமேசானில் ‘சாணிக்காகிதம்’ திரைப்படம் வெளியாகும் என்றும் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடித்த ஒரு சில படங்கள் ஓடிடியில் வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு திரைப்படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது