வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (09:50 IST)

சொல்லிட்டு வந்த ஃபர்ஸ்ட் லுக்.. சொல்லாமல் வந்த செகண்ட் லுக்! – கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இரவு 12 மணிக்கு சர்ப்ரைஸாக செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் சேவியர் இயக்கி வரும் படம் தளபதி 66. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நாளை விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் தளபதி 65 முக்கிய அப்டேட் வெளியாகலாம் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு தளபதி 66 ஆன பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் நேற்று இரவு 12 மணிக்கு சர்ப்றைஸாக செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பீஸ்ட் குறித்த ஹேஷ்டேகுகளும், விஜய் பிறந்தநாள் ஹேஷ்டேகுகளும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றன.