வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 22 ஜூன் 2021 (12:07 IST)

விஜய் பட டைட்டில் தொடர்ந்து ஆங்கிலத்தில் இருப்பதன் மர்மம் என்ன? விசிக பிரமுகர் கேள்வி

மாஸ்டர், பிகில் படங்களை அடுத்து ’பீஸ்ட்’ என தொடர்ந்து விஜய் படங்களின் டைட்டில்கள் ஆங்கிலத்தில் இருப்பதன் மர்மம் என்ன? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
விஜய் நடித்துவரும் அடுத்த படத்தின் டைட்டில் ’பீஸ்ட்’ என நேற்று அதிகாரபூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது என்பதும் இந்த டைட்டிலை அடுத்து விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஒருசில தமிழார்வலர்கள் இந்த டைட்டிலுக்கு என்ன அர்த்தம் என்றும், ஏன் விஜய் தொடர்ச்சியாக ஆங்கிலத்திலேயே தனது படங்களுக்கு டைட்டில் வைக்க சம்மதிக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் வன்னிஅரசு இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன. ஆனால் தமது தாய்மொழியான தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப்பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ? மாஸ்டர், பிகில் படங்களை தொடர்ந்து ’பீஸ்ட்’ என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.