வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (18:25 IST)

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை: காவேரி மருத்துவமனை விளக்கம்

vikram
நடிகர் விக்ரம் கடந்த சில மணி நேரத்திற்கு முன்னர் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்பதை பார்த்தோம்
 
அவருக்கு மாரடைப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவருடைய மேனேஜர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை என்றும் அவருக்கு சிறிய நெஞ்சு சம்பந்தமான பிரச்சனை என்றும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கொண்டு வருகிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் தனது சமூக வலைத்தளத்தில் தனது தந்தைக்கு மாரடைப்பு இல்லை என்றும் தயவு செய்து யாரும் வதந்தியைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்
 
இந்த நிலையில் சற்று முன் காவேரி மருத்துவமனை விக்ரம் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை என்றும் லேசான நெஞ்சு கோளாறு தான் என்றும் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது