வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2022 (15:24 IST)

விக்ரம் பிளாக்பஸ்டர் ஹிட்… கிடுகிடுவென உயர்ந்த சம்பளம்...கமல்தான் நம்பர் 1!

விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியால் கமல்ஹாசனின் சம்பளம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக 450 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகின்றன.

ரிலீஸூக்கு முன்பே விக்ரம் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக கமல்ஹாசனுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் ரிலீஸூக்குப் பிந்தைய பிளாக்பஸ்டர் ஹிட்டால் அந்த லாபம் 127 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர படத்துக்காக அவரின் சம்பளத்தையும் சேர்த்தால் 170 கோடிக்கும் மேல் அவருக்கு லாபம் கிடைத்திருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த இமாலய வெற்றியால் இப்போது கமல்ஹாசனின் சம்பளம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினி, விஜய், அஜித் என அனைவரையும் தாண்டி ஒரே படத்தில் உச்சம் தொட்டுள்ளார் கமல்.