சேரனை நாமினேட் செய்யும் கவின், எதிர்ப்பு தெரிவிக்கும் வனிதா!

Last Modified திங்கள், 2 செப்டம்பர் 2019 (09:26 IST)
பிக்பாஸ் வீட்டில் நேற்று தொலைபேசியில் ஆடியன்ஸ் ஒருவர் கேட்ட கேள்வியால் சேரன், லாஸ்லியா மற்றும் கவின் ஆகிய மூவரிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டுள்ளது சேரன் லாஸ்லியா மீது வைத்திருந்த பாசம் டிராமா என கவின் கூறியதாக தொலைபேசியில் கேட்ட கேள்விக்கு, லாஸ்லியா திக்கித் திணறி பதில் சொன்னார். இதனால் சேரனுக்கும் கவினுக்கும், சேரனுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் உள்ளனர்

இந்த நிலையில் இன்றைய நாமினேஷன் படலத்தில் சேரனை கவின் நாமினேஷன் செய்கிறார். சேரன் தேசிய விருது உட்பட பல வெற்றியை பார்த்தவர் என்றும், வெற்றி என்றால் என்னவென்றே தெரியாத இளைஞர்களில் ஒருவர் வெற்றி பெற, அவர் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்றும், அதனால் அவரை தான் நாமினேட் செய்வதாகவும் கவின் கூறுகிறார்

ஆனால் இந்த காரணத்திற்காக வனிதா எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனையடுத்து காரணத்தை மாற்றி கூறிய கவின், சேரனை தனக்கு பிடிக்காது என்றும், அவர் தன்னை நாமினேட் செய்ததால்தான் திரும்ப அவரை நாம் அணியும் செய்வதாகவும் கூறி, இப்போது உங்களுக்கு திருப்தியா? என்று வனிதாவை நோக்கிக் கேட்பதாக இன்றைய முதல் புரமோ முடிவடைகிறது. மொத்தத்தில் இன்று பிக்பாஸ் வீட்டில் ஒரு பிரச்சனை இருக்கிறது என்பது மட்டும் தெரிய வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :