நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவித்த கமல் - கடுப்பான நெட்டிசன்ஸ்!

Last Updated: சனி, 31 ஆகஸ்ட் 2019 (15:36 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோவில் கமல் நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசி ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். 


 
கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் மொக்கையாக இருக்கிறது. புது புது டாஸ்க் கொடுத்து நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டுசெல்லுங்கள் என பார்வையாளர்கள் அடுக்கடுக்காக கமெண்ட்ஸ் செய்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் இந்த வாரம் முழுக்க தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை போட்டியார்களுக்கு கற்றுக்கொடுக்கும் விதத்தில்  நாட்டுப்புற கலைஞர்களை பிக்பாஸ் வீட்டில் இறக்கினர். 
 
ஆனாலும் பிக்பாஸ்  பார்ப்பதற்கு மொக்கையாக தான் இருக்கிறது என தொடர்ச்சியாக கமெண்ட்ஸ் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோவில் கமல் இந்த வாரம் பங்கேற்ற நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களை மேடையில் நிறுத்தி பெருமை படுத்துகிறார். 


இதில் மேலும் படிக்கவும் :