நடுராத்திரியில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய கவின்?
சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடி செய்த வழக்கில் பிக்பாஸ் போட்டியாளர் கவின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிக்பாஸ் போட்டியாளர் கவினின் தாயாரும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இத்தகவல் நேற்று முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வந்ததையடுத்து தற்போது பிக்பாஸில் இருக்கும் கவினுக்கு இது தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்த தகவலை அறிந்து அதிர்ச்சிக்குள்ளான கவின் நேற்று நள்ளிரவே பிக்பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியேறிவிட்டார் எனவும் தகவல்கல் பரவி வருகின்றன. இதனால் இனி கவின் பிக்பாஸ் போட்டியில் தொடர முடியாது என்றும் கூறுகிறார்கள். ஆனால் இன்று வெளிவந்த மூன்று ப்ரோமோமோக்களிலுமே கவின் இடப்பெற்றிருந்தார். ஆகவே இது உண்மையா அல்லது பொய்யா என்பது இன்று இரவு தான் தெரியவரும்.