செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 30 நவம்பர் 2024 (09:42 IST)

கவினின் ‘கிஸ்’ படம் ரிலீஸ் ஆவதில் அனிருத்தால் ஏற்பட்ட சிக்கல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின். அதன் பின்னர் பெரியத்திரையில் கவனம் செலுத்திய அவர் லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் ஆகிய படங்களின் மூலம் நம்பிக்கைக்குரிய இளம் நடிகராக உருவானார். இதையடுத்து அவர் நடித்த பிளடி பெக்கர் என்ற படம் ரிலீஸாகி படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் கவின் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துள்ள நிலையில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் உரிய நேரத்தில் பாடல்கள் கொடுக்காததால் தாமதமாகி வந்தது. அதனால் அவர் அந்த படத்தில் இருந்து விலக, தற்போது ஜென் மார்ட்டின் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அதனால் திரும்பவும் பாடல்கள் உருவாக்கி அதை படமாக்குவதில் தாமதம் ஆவதால் காதலர் தினத்துக்கு ரிலீஸ் ஆக இருந்த ‘கிஸ்’ படம் மேலும் தாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது.