சோறுன்னு வந்துட்டா எல்லாத்தையும் மறந்துருவோம்: பிக்பாஸ் வீட்டில் கலகலப்பு

Last Modified வியாழன், 25 ஜூலை 2019 (09:12 IST)
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கிராமத்து டாஸ்கில் அனைத்து போட்டியாளர்களும் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த டாஸ்க்கில் ஒரு கிராமத்தினர் இன்னொரு கிராமத்தினரிடம் சென்று சாப்பிட வேண்டுமென்றால் அவர்கள் கொடுக்கும் டாஸ்க்கை நிறைவேற்ற வேண்டும் என்பது விதி

இந்த நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் 'பிக்பாஸ் வீட்டில் எவ்வளவு தான் சண்டையாக இருந்தாலும், சோறு என்று ஒரு விஷயம் வந்துவிட்டால் அந்த சோறுக்காக எல்லாவற்றையும் மறந்து விடுகின்றோம். இதற்கு முன்னாடி எப்படி இருந்தோம் என்பதை நினைத்து பார்ப்பதில்லை என்று கவின் கூறுவது போல் உள்ளது

ஏற்கனவே லாஸ்லியாவை நேற்றைய டாஸ்க்கின்போது சேரன் கட்டிப்போட்டதற்கு கவின் கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று அவர் சேரனை குத்திக்காட்டவே இந்த சோறு விஷயத்தை கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து சேரனின் முகம் இறுக்கத்துடன் காணப்படுகிறது. இன்றைய நிகழ்ச்சியில் சேரன் மற்றும் கவின் ஆகிய இருவருக்கும் பிரச்சனை வர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :