வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (15:39 IST)

ஓடிடியில்..... கவின் – அம்ரிதா நடித்துள்ள படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின் நடித்துள்ள லிப்ட் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டவர் கவின். இந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இந்நிலையில் அவர் நட்புன்னா என்னானு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது அவர் லிஃப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இப்படத்தை ஈகா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இந்நிலையில் நட்பின் அடிப்படையில் சிவகார்த்திகேயன் முக்கிய கதாப்பாத்திரத்டில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துள்ளதால், ஜூன் 20 ஆம் தேதி அப்போது உள்ள சூழ்நிலையின் அடிப்படையில் தியேட்டர் திறக்கவில்லை என்றால் ஓடிடியில் வெளியாகும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.