கவின் கன்னத்தில் விழுந்த அறை: அதிர்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள்!

sivalingam| Last Modified வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (09:19 IST)
பிக்பாஸ் வீட்டில் கவின், லாஸ்லியா காதல் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திய நிலையில் நேற்று முன் தினம் வந்த லாஸ்லியாவின் பெற்றோர்கள் லாஸ்லியாவை கண்டித்து அறிவுரை கூறியதோடு, கவினுக்கும் மறைமுகமாக சில குறிப்புகளை தெரிவித்தனர். இதனையடுத்து இனிமேல் பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் இல்லை என்றும், வெளியே சென்று நிலைமைக்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்றும் இருவரும் முடிவு செய்கின்றனர்.

இந்த நிலையில் ‘அருவி’ திரைப்படத்தில் நடித்தவரும் கவினின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான பிரதீப் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு கவினை பார்க்க வருகிறார். வந்தவுடன் கவினுக்கு அறிவுரை எல்லாம் கூறாமல், கவின் கேவலமாக கேம் ஆடியதாகவும், இங்குள்ளவர்களை மட்டுமின்றி வெளியில் உள்ளவர்களின் மனம் புண்படும்படி நடந்ததாலும் கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட்டார்.

பின்னர் ஒருவேளை நீ பிக்பாஸ் டைட்டில் ஜெயித்தால் அதே மேடையில் என்னை கூப்பிட்டு திருப்பி அடிச்சிகோ என்றும் கூறினார். நண்பரின் இந்த எதிர்பாராத செயலால் கவின் அதிர்ச்சி அடைந்தார். கவினை விட தன்னால் தான் கவினுக்கு இந்த நிலை என எண்ணி லாஸ்லிய அதிர்ச்சியில் உறைந்தார். கவின், லாஸ்லியா காதல் முடிவுக்கு வந்ததாகவே கருதப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :