கவின் - விக்னேஷ் சிவன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கவின் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த டைட்டில் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ஆரம்பித்த ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஒரு சில திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் கவின் நடிக்க உள்ளார்
இந்த படத்தை விக்னேஷ் சிவன் உதவியாளர் அருண் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த வீடியோ ஒன்றை கவின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவின் இறுதியில் இந்த படத்திற்கு ஊர்குருவி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற விவரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.