ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : செவ்வாய், 13 நவம்பர் 2018 (09:16 IST)

மீண்டும் ஃபார்முக்கு வந்த கருணாகரன்: மிக்ஸி, கிரைண்டர் சீன் குறித்து பரபரப்பு பேச்சு

சர்கார் இசைவெளியீட்டு விழாவில்,  விஜய் பேசியதைவைத்து ட்விட்டரில் விமர்சனம் செய்தார் கருணாகரன்.

இதனால் விஜய் ரசிகர்கள் கருணாகரனை கடுமையாக  வசைபாடினர். அதற்கு கருணாகரனும் பதிலடி கொடுத்தார். இந்த வார்த்தைப் போர் உச்சகட்டத்திற்குச் சென்றது. அப்போது கருணாகரனின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதால் முடிவுக்கு வந்தது.
 
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ட்விட்டருக்கு வந்த கருணாகரனிடம் ரசிகர்கள் விஜய் குறித்து சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பினர்.  அப்போது, விஜய் ரசிகர்கள் பற்றி உங்களின் கருத்து என்ன எனக் கேட்டதற்கு “யாரையும் பொதுமைப்படுத்திக் கூற முடியாது” என்றார். விஜய்யைப் பிடிக்குமா எனக் கேட்டபோது, “விஜய்யை ரொம்பவே பிடிக்கும்” என்றார்.
 
உங்களின் கால்ஷீட் கேட்டு விஜய் படத்திலிருந்தும் நயன்தாரா படத்திலிருந்தும் ஒரே நேரத்தில் உங்களை அணுகினால் யாருக்கு சம்மதம் தெரிவிப்பீர்கள் என விஜய் ரசிகர்கள் கேட்டார்கள்.  அதற்கு கருணாகரன் “விஜய் படத்திற்கு” எனப் பதிலளித்தார். மிக்ஸி, லேப்டாப் எதுவும் உடைத்தீர்களா எனக் கேட்டதற்கு, “இல்லை, ஒருவேளை உடைத்தால் நான்தான் அதை வாங்கவேண்டும் என எனக்குத் தெரியும்” என்றும் கருணாகரன் கூறினார்.