வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (11:40 IST)

அட்டு ஃப்ளாப் அடிக்கும் பாலிவுட் படங்கள்! – ஓசி டிக்கெட்னாலும் யாரும் வரல!

சமீப காலமாக இந்தியில் வெளியாகும் படங்கள் தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் வட இந்தியாவிலேயே சரியாக போகாமல் இருப்பது பாலிவுட் உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் படங்கள் வெளியாகி வந்தாலும், பெரிய அளவில் வசூல் மற்றும் புகழை பெறுபவையாக கடந்த பல ஆண்டுகளாக பாலிவுட் படங்களே இருந்து வந்தன. முக்கியமாக பாலிவுட்டின் கான் நடிகர்களான ஷாரூக்கான், ஆமிர் கான், சல்மான் கான் உள்ளிட்டோருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

ஆனால் கடந்த சில காலமாக இந்த ட்ரெண்ட் அடியோடு மாறியுள்ளது. தென்னிந்தியாவிலிருந்து உருவாகும் படங்கள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், பாலிவுட் படங்களோ இந்தி பேசும் மாநிலங்களில் கூட ஹிட் அடிக்காத நிலை உள்ளது.

தென்னிந்திய மொழிகளில் உருவான புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப், விக்ரம் உள்ளிட்ட பல படங்கள் தேசிய அளவில் வசூலில் சக்கைப்போடு போட்டுள்ளன. ஆனால் இந்திய வெளியான பெரிய பட்ஜெட், ஸ்டார் நடிகர்களின் படங்களான ரக்‌ஷாபந்தன், ப்ரித்விராஜ், பெல்பாட்டம், பச்சன் பாண்டே என பல படங்கள் வசூலில் திணறியுள்ளன. பிரபல நடிகர் ஆமிர்கானின் லால் சிங் சத்தா படத்திற்கு கூட ரசிகர்கள் பலர் செல்லவில்லை. இதனால் சில திரையரங்குகள் பாலிவுட் படங்களுக்கு 3 டிக்கெட் எடுத்தால் 1 டிக்கெட் இலவசம் என அறிவித்தும் கூட திரையரங்குகள் நிரம்பாததால் கலக்கத்தில் உள்ளதாம் பாலிவுட் வட்டாரம்.