சுல்தான் இயக்குனருக்கு டும் டும் டும் – நேரில் சென்று வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

Last Modified புதன், 28 அக்டோபர் 2020 (10:18 IST)

இயக்குனர் பாக்யராஜ் கண்ணனின் திருமணம் சில நாட்களுக்கு முன்னர் எளிமையாக நடந்துள்ளது.

எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அந்த படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்போது திருமனம் செய்துகொண்டுள்ளார். சுல்தான்' படப்பிடிப்பின்போதே இயக்குநர் பாக்யராஜ் கண்ணனுக்கும் ஆஷாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 26 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமனத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :