புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (09:07 IST)

சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் நடித்த கார்த்திக் சுப்புராஜின் மனைவி: ஒரு ஆச்சரிய தகவல்

ரஜினி படத்தில் நடித்த கார்த்திக் சுப்புராஜின் மனைவி:
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தான் நடித்த படங்களில் கூட தலை காட்டுவதை விரும்ப மாட்டார். இந்த நிலையில் அவருடைய மனைவி, ரஜினி நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்து உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’பேட்ட’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. சமீபத்திய ரஜினி படங்களில் இந்தப் படம்தான் அதிக வசூல் செய்தது என்பதும் ரஜினியின் வழக்கமான ஸ்டைல் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் தான் வெளிப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் சுப்பராஜ் இயக்குனராக இருந்ததும் ஒரு காரணம் ஆகும் 
 
இந்த நிலையில் இந்த படத்தில் கார்த்திக் சுப்பராஜ் மனைவி சத்யபிரேமா ஒரே ஒரு காட்சியில் ’பேட்ட’ படத்தில் நடித்து இருப்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து அதனை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர். கல்லூரி வார்டனாக பொறுப்பேற்க வரும் ரஜினியிடம் அப்பாயின்மென்ட் ஆர்டரை கொடுக்கும் பெண்தான் கார்த்திக் சுப்புராஜ் மனைவி என்ற புகைப்படத்தோடு ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர் இதனை பேட்டி ஒன்றில் கார்த்திக் சுப்புராஜ் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ரஜினி படத்தில் கார்த்திக் சுப்புராஜின் மனைவி நடித்த இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது