திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (08:36 IST)

“கமல் சார் நடிக்க ஆசைப்பட்ட கதாபாத்திரத்தில் நான்…” நடிகர் கார்த்தி சிலிர்ப்பு

நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் ஆடியோ ரிலீஸில் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தின் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ஆகியவை நேற்று மாலை பிரம்மாண்டமாக வெளியாகின.இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்ட நிலையில், தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் நடிகர் கார்த்தி பேசியது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. படத்தில் தான் நடித்துள்ள வந்தியத் தேவன் கதாபாத்திரம் பற்றி பேசிய அவர் “இந்த படத்தை 1989 ல் கமல் சார் எடுக்க நினைத்தார். அப்போது அவர் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில்தான் நடிக்க ஆசைப்பட்டார். அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என நினைத்தாலே பயமாக இருக்கிறது. இந்த படம் 70 வருட தமிழ் சினிமாவின் கனவு. இந்த தலைமுறையில் பிறந்ததற்காக சந்தோஷப் படுகிறேன்” எனப் பேசியுள்ளார்.

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.