வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (09:12 IST)

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு விற்பனையா? தீபா விளக்கம்

Deepa
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனின் வேதா இல்லம் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தீபா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 
 
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் தற்போது சட்டப்படி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோருக்கு சொந்தமாகியுள்ளது.
 
இந்த நிலையில் போயஸ்கார்டன் வேதா இல்லத்தை தீபா மற்றும் தீபக் ஆகிய இருவரும் சேர்ந்து விற்பனை செய்ய உள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்து வருவதாகவும் சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது
 
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தீபா எங்கள் முன்னோர்களின் சொத்தான வேதா இல்லத்தை விற்பனை செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் இதுபோன்ற வதந்திகளை யாரும் தயவு செய்து நம்ப வேண்டாம் என்றும் வதந்தி பரப்புபவர்கள் இதனை மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்