1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : திங்கள், 13 நவம்பர் 2017 (10:13 IST)

பிரகாஷ்ராஜுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆனந்தராஜ்...

நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனக் கூறிய நடிகர் பிரகாஷ்ராஜுவிற்கு எதிராக நடிகர் ஆனந்தராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது என்றும் திரைப்பட நடிகர்கள் கட்சித் தலைவர்களாவது நாட்டுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்படும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
 
நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாது. திரைப்பட நடிகர்கள் கட்சித் தலைவர்களாவது நாட்டுக்கு மிகப் பெரிய பேரழிவு ஏற்படும். நடிகர்களின் அரசியல் கட்சியில் சேருவதையும் விரும்பவில்லை. கமல்ஹாசன் தொடங்கும் கட்சியில் நான் ஒருபோதும் சேரமாட்டேன். நடிகர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். நடிகர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அரசியலுக்கு வரக்கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.
 
இவரின் இந்த கருத்திற்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த நடிகர் ஆனந்தராஜ் “பிரகாஷ்ராஜ் கன்னட நடிகர்களை சொல்கிறாரா அல்லது தமிழ்நாட்டு நடிகர்கள் பற்றி பேசுகிறாரா எனத் தெரியவில்லை. அண்ணா முதல் அம்மா வரை எல்லோரும் கலைத்துறையை சேர்ந்தவர்கள்தான். மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறவர்கள் எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்” என அவர் தெரிவித்தார்.